மட்டக்களப்பு, தாந்தாமலை பகுதியில் 9000ம் லீற்றர் பாலுடன் பயணித்த பவுசர் திடீரென வீதி தாழிறங்கியதால் குறித்த வாகனம் சிக்கிக்கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும்தெரியவருவதாவது,
நேற்றிரவு(20) 9 மணியளவில் 9000ம் லீற்றர் பாலினை சுமந்த வவுசர் ஒன்றை சாரதி வழிமாறி தாந்தாமலை வீதியூடாக செலுத்தி சென்றுள்ளார்.
இவ்வாறு பயணித்த சாரதி ஒரு சிறிய வீதியானூடாக சென்றுகொண்டிருந்த போது வவுசரின் பின் பகுதி தீடீரென வீதியை உடைத்துக்கொண்டு கீழிறங்கியுள்ளது.
அண்மையில் இப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் குறித்த வீதியின் கீழால் மண்ணரிப்பு ஏற்பட்ட நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.