எழுபத்தாறு வருடங்கள் மஹிந்த, ரணிலுடன் இருந்தவர்கள் குரங்குகளுடன் இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள் இருப்பது கடினம் அல்ல என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள தேங்காய் அரிசி நெருக்கடி தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய பொது அவர் தெரிவிக்கையில்,
தென்னை மரத்தை நட்டு, தேங்காய் வர எவ்வளவு காலம் ஆகும்? மக்களுக்கு பைத்தியம் இல்லை, மக்களுக்கு கஷ்டம். அதுவே அனைத்திற்கும் காரணம் என்றார்.