வாகநேரி நீர்ப்பாசன திட்ட முகாமைத்துவத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா ஓட்டமாவடி நீர்பாசன திணைக்கள உபகாரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றது.
மேற்படி அமைப்பினால் நீர்பாசன திணைக்களத்தின் கீழ் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் ஊழியர்களின் பல்வேறுபட்ட சேவைகளைப் பாராட்டி குறித்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது செங்கலடி பிரதேச உறுகாமம் நீர்பாசன பொறியியலாளர் எ.விஷ்ணுரூபன் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் பெற்று செல்வதனையும், அவர் பிரதேச விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு ஆற்றிய சேவையினை பாராட்டி, பொன்னடை போர்த்தி, நினைவுச்சின்னம் மற்றும் வாழ்ததுமடல் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் உறுப்பினர்கள் கடந்த காலத்தில் ஆற்றிய சேவை தொடர்பாக நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம்.இப்ராகிம், வாழைச்சேனை கமலசேவை உத்தியோகத்தர் கே.ஜெயக்காந்தன், பொறியியல் உதவித் திட்ட முகாமையாளர்களான வி.சியாமளன், மற்றும் எம்.கின்சாட் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.