எதிர்வரும் சித்திரை மாதத்திற்கு மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட சீர்திருத்தம் ஒன்றை கொண்டுவந்த பின்னர் உடனடியாக மாகாணசபை தேர்தலை நடாத்துவதாக ஜனாதிபதி தங்களிடம் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு 75வது ஆண்டு நிறைவினை குறிக்கும் நிகழ்வுகளை முன்னிட்டு நேற்று முன்தினம் (21) மட்டக்களப்பு நகரில் உள்ள அமரர் தந்தை செல்வா பூங்காவில் உள்ள அன்னாரின் சிலையருகே நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
முதலாவதாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துவோம், மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கான சட்ட திருத்தம் வந்தால் மாகாண சபை தேர்தலையும் உடனடியாக நடத்த கூறியும் ஒரு கோஷம் வரும்.
சித்திரை முடிந்ததன் பிற்பாடு அந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து அதன் ஊடாக மாகாண சபை தேர்தலை நடத்தக்கூடிய வகையில் அந்த சட்டத்தை நிறைவேற்றிய தன் பிற்பாடு நிச்சயமாக மாகாண சபை தேர்தலை நடத்துவேன் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டார்.
அதேசமயம் குறித்த நிகழவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ,முன்னாள் பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள்,கட்சியின் மகளிர்,இளைஞர் அணியினர் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.