Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச நீதி கோரும் போராட்டத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை அறைகூவல்!

சர்வதேச நீதி கோரும் போராட்டத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை அறைகூவல்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச நீதி கோரும் போராட்டத்திற்கான அறைகூவலை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் விடுத்துள்ளனர்.

நேற்று (21) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் அறப்போருக்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் பேரெழுச்சிகொள்ள வேண்டுமென கோரியுள்ளனர்.

அவ்வாறு அறிக்கையின் முழு வடிவம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது,

“அன்பார்ந்த எமது மக்களே!

உலகப் பரப்பில் வாழும் தொன்மை மிக்க இனமாகிய நாம், ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளாலும் எம்மினம் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புகளுக்காக தொடர்ந்து நீதிகோரிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆயுதப் போராட்ட காலத்திலும் அதனை தொடர்ந்த காலத்திலும் எம்மினம் மீதான இனவழிப்பு தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இவ்வாறான இனவழிப்பு சாட்சியங்களாக அவ்வப்போது எமது தாயக பிரதேசங்களிலும் சிறிலங்கா பிரதேசங்களிலும் மனிதப் புதைகுழிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவ்வாறு இனங்காணப்படும் மனிதப் புதை குழிகள் மீண்டும் புதைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு விடுகின்றது.

எந்த ஒரு ஆய்வுகளும் இன்றி, நீதி செயற்பாடுகளும் இன்றி அனைத்தும் மறைக்கப்பட்டு, மறுதலிக்கப்படுகின்றது.

இந்தச் சூழலில் எமது தாயக பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனிதப் புதைக்குழிகள் என்பது நம் இனத்துக்கு நடந்த இனவழிப்புக்கான மிகப்பெரும் ஆதார சாட்சியாகவே நாம் உணர்கின்றோம்.

எம்மால் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளின் எலும்புக் கூடுகளே அவையென நாம் உறுதியாக நம்புகின்றோம்.

கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை தவிர்த்து, எமது இனத்தின் விடுதலையே ஒரே இலட்சியம் எனும் பொது வேலைத்திட்டத்தில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், பல்கலைக்கழகங்கள், சங்கங்கள், சம்மேளனங்கள், கழகங்கள் என அனைவரும் இணைந்து தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசமெங்கும் நீதி கோரல் போராட்டத்தினை முன்னெடுக்குமாறு அரசியல்துறையாகிய நாம் அறைகூவல் விடுகின்றோம்.

எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கும் தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாகிய அறப்போருக்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் பேரெழுச்சிகொள்ள வேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

விடியலை நோக்கிய எமது மக்களின் பயணம் தொடரட்டும்” – என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
கைது தடைக் கோரி தாக்கல் செய்த மனு; மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்
செய்திகள்

கைது தடைக் கோரி தாக்கல் செய்த மனு; மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்

July 23, 2026
Next Post
சார்லி சாப்ளினின் மகள் காலமானார்!

சார்லி சாப்ளினின் மகள் காலமானார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.