Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லிங்க்ட்-இன்க்கு போட்டியாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

லிங்க்ட்-இன்க்கு போட்டியாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

தற்போது வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களைத் தேடுபவர்கள் லிங்க்ட்-இன் (LinkedIn) எனும் இணையதளத்தைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் லிங்க்ட்-இன் தளத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் புதிய வசதியை ட்விட்டர் தளம் கொண்டுவர உள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது லிங்க்ட்-இன் தளத்திற்குப் போட்டியாக ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் உறுதி செய்யப்பட்ட கணக்கு (Verified Accounts) எனும் அந்தஸ்தைப் பெற்ற நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு ஒரு வசதியை கொண்டுவருகிறது. குறிப்பாக அந்த நிறுவனங்களின் ட்விட்டர் பக்கத்தில் பயோ (Bio) எனும் அவர்களைக் குறித்த சுயவிவரங்கள் இடம்பெறும்.

இந்த புதிய வசதியின் மூலம் அந்த நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களை இந்த பயோ பகுதிக்குக் கீழே கொடுக்க முடியும். எனவே இதன் மூலம் வேலை தேடும் இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களின் இணையதளத்தை அடைந்து அந்தந்த நிறுவனங்களில் உள்ள வேலைகளைக் குறித்து விவரமாக அறியவும், சுலபமாக விண்ணப்பிக்கவும் முடியும். இதுதவிர @ட்விட்டர் ஹயரிங் எனும் பெயரில் வேலைவாய்ப்புகள் குறித்த செய்திகளுக்காகவே ஒரு கணக்கை ட்விட்டர் நிறுவனம் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நிமா ஒஜி எனும் செயலி ஆராய்ச்சியாளர் இதுகுறித்து ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த ஆராய்ச்சியாளர் வெளியிட்ட தகவலின்படி, ட்விட்டர் ஹயரிங் (Twitter Hiring) எனப்படும் இந்த வசதி மூலம் வெரிஃபைடு கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் 5 எண்ணிக்கை வரை தங்களிடம் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவலைப் பதிவு செய்யலாம்.

அதேபோல் காலியிடங்கள் உருவாக்கும் போது அது குறித்த விவரங்கள் சில நிமிடங்களுக்குள்ளாகவே ட்விட்டரில் வெளிப்படும் வகையில் ஒரு மென்பொருள் கட்டமைப்பை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்றும், வேலை வாய்ப்பை தேடும் நபர்கள் இதன் மூலம் நிறுவனங்களின் இணையதளத்திற்குச் சென்று விவரங்களை அறியவும், விருப்பமிருந்தால் விண்ணப்பிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ட்விட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் (Twitter CEO Elon Musk) கடந்த மே மாதமே வேலைவாய்ப்பு தகவல் பரிமாற வசதியைக் ட்விட்டரில் கொண்டுவர ஆலோசிப்பதாகச் சூசகமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் முன்பே அறிவித்திருந்தபடி, இந்த புதிய வசதியைக் கொண்டுவர முடிவு செய்துள்ளார்.

அதேபோல வெரிஃபைடு பயனர் அந்தஸ்து பெற்ற நிறுவனங்களுக்கு இலவச சேவையாக இந்த வசதியை ட்விட்டர் வழங்கும் என்று தெரியவந்துள்ளது. இதுதவிர பல்வேறு புதிய புதிய அம்சங்களைக் கொண்டுவர ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையை விட ஏழ்மையான நாடான நைஜீரியா IMF இடம் பெற்ற கடனை முழுமையாக செலுத்தி முடித்தது
செய்திகள்

இலங்கையை விட ஏழ்மையான நாடான நைஜீரியா IMF இடம் பெற்ற கடனை முழுமையாக செலுத்தி முடித்தது

May 23, 2025
பிரித்தானியா- பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு ஹமாசுடன் தொடர்பு; இஸ்ரேல் பிரதமர்
உலக செய்திகள்

பிரித்தானியா- பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு ஹமாசுடன் தொடர்பு; இஸ்ரேல் பிரதமர்

May 23, 2025
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
செய்திகள்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

May 23, 2025
யால காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர்ச்செய்கையை சுற்றிவளைத்த பொலிஸார்
செய்திகள்

யால காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர்ச்செய்கையை சுற்றிவளைத்த பொலிஸார்

May 23, 2025
ஏற்றுமதித் துறையில் அனுபவம் உள்ள அர்ச்சுனா!
காணொளிகள்

ஏற்றுமதித் துறையில் அனுபவம் உள்ள அர்ச்சுனா!

May 23, 2025
இலங்கையின் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் கவனம்
செய்திகள்

இலங்கையின் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் கவனம்

May 23, 2025
Next Post
இன்ரர் மியாமி உதை பந்தாட்ட அணிக்காக விளையாடும் மெஸ்ஸி!

இன்ரர் மியாமி உதை பந்தாட்ட அணிக்காக விளையாடும் மெஸ்ஸி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.