உதைபந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவர் லயனல் மெஸ்ஸி. ஆர்ஜென்ரீனாவைச்
சேர்ந்த இவர் தற்போது இன்ரர் மியாமி உதை பந்தாட்ட அணிக்காக விளையாடி வருகிறார்.
அண்மையில்தான் இந்த கழக அணியில் அவர் இணைந்தார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக இன்டர் மியாமி அணிக்காக அவர் களம் இறங்கினார். தனது முதல் போட்டியில் அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட கோலை பதிவு செய்து அசத்தினார். அதன் மூலம் லீக்ஸ் கோப்பை தொடரில் குரூஸ் அசூல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அணி வீழ்த்தியது.
ஆர்ஜென்ரீனா உதைபந்தாட்ட அணியின் தலைவரான லயனல் மெஸ்ஸி, கடந்த ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்து போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு கிண்ணத்தைப் பெற்றுத் தந்தார்.கழக அளவிலான போட்டிகளில் பார்சிலோனா மற்றும் பி. எஸ். ஜி. அணிக்காக கடந்த காலங்களில் விளை யாடி உள்ளார். தற்போது அமெரிக்க நாட்டு கழக அணியான இன்டர் மியாமி அணிக்காக விளையாட இரண்டரை ஆண்டு காலம் ஒப்பந்தம் செய்துள்ளார்.
வரும் 2026 உதைபந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர் அமெரிக்க, மெக்சிக்கோ மற்றும் கனடாவில்தான் நடை
பெற உள்ளது. அந்த வகையில் மெஸ்ஸியின் வருகை அமெரிக்க அளவில் உதை பந்து விளையாட்டில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என தெரிகி றது.