Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘ஜெய் பீம்’ படத்துக்கு இல்லை…ஆனால் கடத்தல்காரர் ‘புஷ்பா’வுக்கு தேசிய விருது

‘ஜெய் பீம்’ படத்துக்கு இல்லை…ஆனால் கடத்தல்காரர் ‘புஷ்பா’வுக்கு தேசிய விருது

2 years ago
in அரசியல், உலக செய்திகள், சினிமா, செய்திகள்

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா தி ரைஸ்’ திரைப்படம் இந்தியா முழுவதும் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பெரும் வெற்றியடைந்தது.

புஷ்பா படத்துக்காக சிறந்த நடிகர் தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு 2023 இல் வழங்கப்பட்டது. சிறந்த படம், சிறந்த இயக்குனர் தேசிய விருதும் புஷ்பா படம் பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் ‘புஷ்பா 2 தி ரூல்’ என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி வெளியானது.

இதற்கிடையே ‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

அல்லு அர்ஜுன் வீட்டின் மீது ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசிய சம்பவமும் நிகழ்ந்தது. எனவே அல்லு அர்ஜுன் – தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

அல்லு அர்ஜுன் படங்களை மாநிலங்களில் ஓட விடமாட்டோம் என காங்கிரஸ் எம் எல் ஏ ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை வெளிப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்திய ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் தேசிய விருது பெறவில்லை. ஆனால், ஒரு போலிஸ்காரரை நிர்வாணமாக்கிய கடத்தல்காரருக்குத் தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது என்று தெலுங்கானா அமைச்சர் சீத்தாக்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படமான ஜெய் பீம், அதிகார வர்க்கத்தால் பழங்குடியினர் படும் பாடுகளை குறித்தும், அவர்களுக்கு சட்டத்தின் மூலம் நீதி பெற்றுத்தர முடியும் என்பது குறித்தும் பேசிய படமாகும்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
இரவு கடமையிலிருக்கும் போக்குவரத்து பொலிஸாரின் அங்கியினால் விபத்து ஏற்படும் அபாயம்; இன்று முதல் புதிய நடைமுறை

இரவு கடமையிலிருக்கும் போக்குவரத்து பொலிஸாரின் அங்கியினால் விபத்து ஏற்படும் அபாயம்; இன்று முதல் புதிய நடைமுறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு