பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (25) மாலை சொகுசுக் கார் ஒன்று நடுவீதியில் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
பண்டாரவளை, தந்திரிய பிரதேசத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
விபத்தின் போது காருக்குள் சிக்கியிருந்த சிறு குழந்தை உள்ளிட்ட குடும்பமொன்றை பிரதேசவாசிகள் பாதுகாப்பாக மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
காரின் தீயை அணைப்பதில் பிரதேசவாசிகள் மற்றும் வீதியால் பயணித்த ஏனைய வாகன சாரதிகள் ஒன்றிணைந்து கடும் முயற்சியில் ஈடுபட்ட போதும், தீயினால் கார் பெரும் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.