திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்;கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் மற்றும் அவரது உறவினரான சிறுவன் உட்பட 3 பேர் கடல் அலையால் இழுத்துச் சென்று, காணாமல் போயிருந்தவர்களின் சடலம் நேற்று வியாழக்கிழமை (26) மாலை விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் ஓதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொத்துவில் சங்கமன் கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், அவருடைய 15 வயதுடைய டினுஜன், மற்றும் நந்தராஜ் சகோதரியின் மகனான 17 வயதுடைய கிரிஷோர் ஆகிய மூவரும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.
குறித்து பிரதேசத்தைச் சேர்ந்த மயில்வாகனம் நந்தராஜ் அவரது மகன் சகோதிரியின் மகன் ஆகிய மூவரும் சம்வபதினமான புதன்கிழமை (25) மாலையில் நத்தார் பண்டிகையையிட்டு கடலில் நீராடச் சென்ற சென்றிருந்தனர்.
இந்தநிலையில் மச்சான் மார் இருவரும் கடலில் நீராடிய போது கடல் அலையால் இழுத்து செல்லப்படதையடுத்து அவர்களை காப்பாற்ற கடலில் குதித்த தந்தையையும் கடல் அலை இழுத்துச் சென்று காணாமல் போனார்.
இதனை தொடர்ந்து காணாமல் போனவர்களை, உறவினர்கள், கடற்படை மற்றும் பொலிசாருடன் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் வியாயகபுரம் மங்கமாரி கடல்கரை பகுதியில் நேற்று காலையில், முதலில் 17 வயது சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியது, இதனையடுத்து சில மண நேரத்தின் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக இருவரது சடலமும் கரையொதுங்கியதையடுத்து சடலங்களை மீட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசர் மேற்கொண்டு வருகின்றனர்.