ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் காரணமாக நாட்டில் சுமார் நூறு பன்றிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யால, வில்பத்து வனப்பகுதிகளிலும் கம்பஹா, மீரிகம, பேராதனை மற்றும் இரத்தினபுரி போன்ற இடங்களிலும் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தாரக பிரசாத் தெரிவித்துள்ளார்.
தற்போது காட்டுப் பன்றிகள் மத்தியில் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது.
இதன் தாக்கம் நாட்டில் உள்ள அனைத்து காட்டுப் பன்றிகளையும் பாதிக்கும் நிலை காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தாரக பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட சில நோய்த்தாக்கம் காரணமாக நாட்டில் பன்றி இறைச்சி விற்பனையை தடை செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் கடந்த ஒக்டோபர் மாதம் நடவடிக்கை எடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டது.
மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிகளவான பண்ணைகளில் இந்த நோய் பரவியிருந்த நிலையில், உயிரிழந்த பன்றிகளின் உடல்களை அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.