இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசி 150 ரூபாவுக்கும் குறைவான விலைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாய் வரி விதித்து, அதிகபட்ச விலையாக 230 ஆக உயர்த்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தட்டுப்பாடு ஏற்பட்ட போது முன்னைய அரசாங்கங்கள் அரிசியை இறக்குமதி செய்து இரண்டு ரூபா அல்லது அதிகபட்சம் பத்து ரூபா வரியின் கீழ் மானிய விலையில் மக்களுக்கு அரிசி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபா அல்லது 45% வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.