கேகாலை, வரக்காபொல, கனேஉட வீதியில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 11 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இந்த வீட்டின் உரிமையாளர்கள் கடந்த 28 ஆம் திகதி அன்று வரக்காபொல சந்தியில் உள்ள விகாரை ஒன்றின் ஊர்வலத்தைப் பார்வையிட சென்றுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் சிலர் இந்த வீட்டின் கதவை உடைத்து வீட்டிலிருந்த 11 இலட்சத்து 96,500 ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
பின்னர், இந்த வீட்டின் உரிமையாளர்கள் ஊர்வலத்தை பார்வையிட்டு மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைந்திருப்பதையும் வீட்டிலிருந்த பொறுமதியான பொருட்கள் காணாமல் போயிருப்பதையும் கண்டுள்ளனர்.
இதனையடுத்து, வீட்டின் உரிமையாளர்கள் இது தொடர்பில் வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் வரக்காபொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.