அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதில் குழு (CERT) தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை கணினி அவசரகால பதில் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டு அதன் தரவுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் அலைவரிசையும் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் சேனலை விரைவில் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட யூடியூப் சேனலில் இடம்பெறும் அங்கீகரிக்கப்படாத செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.