மியன்மார் ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள செல்வதற்கு தங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 26ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குநர் உட்பட உறுப்பினர்கள் முல்லைத்தீவில் விமானப்படை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களின் நிலைமையினை கண்காணிப்பதற்கு முயன்றனர் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
எனினும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது ,முல்லைத்தீவு கரைக்கு வந்த படகிலிருந்த 115 பேரில் பல கைக்குழந்தைகள் உள்ளன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு சட்டத்தின் 11 வது பிரிவின்படி இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எவரையும் சென்று பார்ப்பதற்கான உரிமை மனித உரிமை ஆணைக்குழுவிற்குள்ளது ( இலங்கையர்கள் அல்லாதவர்களையும்) எனவே குறிப்பிட்ட விமானப்படை முகாமிற்கு சென்று ,அங்குள்ள சிறுவர்கள் உட்பட அனைத்து புகலிடக்கோரிக்கையாளர்களின் நலன்களை கண்காணிப்பதற்கான சட்டபூர்வ அதிகாரம் மனித உரிமை ஆணைக்குழுவிற்குள்ளது என ஜனாதிபதிக்கான கடிதத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.