திருகோணமலை கடற்பரப்பில் பௌத்த கொடிகளைத் தாங்கியவாறு வெறுமையான மிதவைப் படகு ஒன்று நேற்று (30) இரவு கரை ஒதுங்கியுள்ளது. குறித்த மிதவை படகு காணப்பட்ட புத்தகம் மற்றும் எழுத்துக்களை வைத்து அது மியன்மாரில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் வாழைச்சேனை கடற்பரப்பிலும் இன்று (31) இதைவிட நீளமான மிதவைப் படகு ஒன்றும் கரை ஒதுங்கியுள்ளது.
இந்த படகில் சமைத்து சாப்பிட்டதற்கான அடுப்புகள் மற்றும் பாத்திரங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மாரில் இருந்து 115 பேருடன் வருகை தந்த படகு ஒன்று கடந்த 19ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியிருந்தது. இதில் வந்த அகதிகள் தாம் 3 படகில் வந்ததாகவும் இடைநடுவில் இரண்டு பழுதடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.