Android 14 | மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் இருந்து செயலிகளை டவுன்லோட் செய்ய முயற்சிக்கும் போது, தனது யூசர்களுக்கு வார்னிங் நோட்டிபிகேஷன் அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டின் 14வது வெர்ஷன் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
குறைகளை சரி செய்தும், பல புதிய அம்சங்களை உட்புகுத்தியும் ஆண்ட்ராய்டு 14 வெர்ஷன் யூசர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதில் குறிப்பாக ஆண்ட்ராய்டு யூஸர்கள் கூகுள் பிளே ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ செயலிகள் இல்லாமல் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் இருந்து செயலிகளை டவுன்லோட் செய்ய முயற்சிக்கும் போது, தனது யூசர்களுக்கு வார்னிங் நோட்டிபிகேஷன் அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதற்காக உங்களால் மூன்றாம் தரப்பு செய்திகளை டவுன்லோட் செய்யவே முடியாது என்பதாக அர்த்தம் கிடையாது. நீங்கள் டவுன்லோட் செய்யும் போது மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்து டவுன்லோட் செய்கிறீர்கள் என்பதை உங்களுக்கு தெரிவிக்கும் பொருட்டும், அதனால் ஏற்படும் ஆபத்தை நினைவுறுத்தும் வகையிலும் எச்சரிக்கை அனுப்பப்படுகிறது.
சமீப காலமாக கூகுள் இந்த மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோடு செய்வதன் நம்பகத்தன்மையைப் பற்றி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோட் செய்யும் போது அவற்றை எங்கிருந்து டவுன்லோட் செய்கிறோம் என்பதை பற்றியும், அவை பாதுகாப்பானவை தானா என்பதை உறுதி செய்யும் பொருட்டும் ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் இந்த புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோட் செய்யும்போது, இது ஒரு கூடுதல் பாதுகாப்ப அம்சமாக கருதப்படுகிறது. இவற்றைத் தவிர்த்து மூன்றாம் தரப்பு செயலிகளை இன்ஸ்டால் செய்வதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பற்றியும் கூகுள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோடு செய்யும் போது, அவற்றின் மூலம் அந்த டிவைஸ் மற்றும் யூசர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு குறைபாட்டை பற்றியும் வலியுறுத்தி வருகிறது.
மறுபுறம் பார்க்கையில் இவ்வளவு நாட்களாக மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோடு செய்வதில் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வந்த ஆப்பிளின் ஐஓஎஸ் பிளாட்ஃபார்ம் , சமீபத்தில் அதில் சில தளர்வுகளை ஏற்படுத்தி அந்த யூசர்களை மூன்றாம் தரப்பு செயலிகளை தரவிறக்கம் செய்ய அனுமதித்து வருகிறது.
ஆனால் கூகுள் நிறுவனமும் இவ்வளவு நாட்கள் மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோடு செய்வதை பற்றி மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் தற்போது இதற்கு முக்கியத்துவம் அளிப்பது யூசர்களிடையே சற்றுக் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.
மிகப் பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஆண்ட்ராய்டு 14 பீட்டா வெர்ஷன், இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கூகுள் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் போது ஆண்ட்ராய்டு 14 வெர்ஷன் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.