நடிகர் விஷால் கடைசியாக நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தை அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படங்களுக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுடன் படக்குழுவினர் சிறப்பு சந்திப்பு நடத்தினர்.
இதில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா, டி.ஆர்.ராஜேந்திரன் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் மாணவர்களின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார்.
அப்போது மாணவி ஒருவர், விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தால், அதில் நீங்கள் சேருவீர்களா என கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், அது கடவுள் கையில் தான் இருக்கிறது. கடவுள் முடிவு எதுவாக இருக்கிறதோ, அதன்படி நான் செயல்படுவேன் என்றும் எதுவும் நடக்கலாம்.
அரசியல் என்பது சமூக சேவை. அது பிசினஸ் அல்ல. நாம் எல்லோரும் அரசியலில்தான் இருக்கிறோம். பிறருக்கு 50 ரூபாய் கொடுத்து உதவி செய்தால் கூட அவர் அரசியல்வாதிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.