தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் ஊடாக எவரையும் கைது செய்யவோ, வழக்குத் தொடரவோ அல்லது நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவோ அரசாங்கம் யாருக்கும் அறிவுறுத்தல் வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவருக்கும் ஏதேனும் காரணத்திற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நாடாளுமன்றில் சட்டமொன்று இயற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் நாட்டின் நன்மதிப்பினை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் ஊடகமொன்று இந்த திட்டம் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீதிகளில் பலாக்காய் அல்லது இலைகஞ்சி விற்பனை செய்ய முடியாது என ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.