யாழ்ப்பாணத்திலுள்ள மதுபான சாலையொன்றில் நுழைந்து வன்முறைக் கும்பலொன்று தாக்குதல் நடாத்திய அதிர்ச்சி சிசிரிவி காணொளிகள் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது கடந்த மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ். நகரிலுள்ள மதுபானசாலையொன்றிற்குள் கறுப்புத் துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு வாள்களுடன் வன்முறைக் கும்பலொன்று நுழைந்துள்ளது.
இதன் போது குறித்த மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சிசிரிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.