காலி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொடந்துவ மற்றும் குமாரகந்த சந்திப்பில் நேற்று முன்தினம் (04) இரவு 7.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற வெளிநாட்டவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது தூக்கியெறியப்பட்ட இளைஞன் எதிரில் வந்த பேருந்தில் மோதுண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதர பட்டுவத்த, தொடந்துவ பகுதியை சேர்ந்த 25 வயதான சந்தீப் லக்ஷனா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டு நாட்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இளைஞன் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டவர் மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் ஹிக்கடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலம் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.