மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நகர் புறங்களிலும் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது மாவட்டத்தில் அமைந்துள்ள களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம். குருக்கள்மடம், மற்றும் வெல்லாவெளிப் பகுதியில் போன்ற பல பகுதிகளிலும் இவ்வாறு குரங்குகள் கிராமங்களுக்குள் உட்புகுந்து, பயன்தரும், மா, தென்னை, வாழை, உள்ளிட்ட பல்லாண்டுப் பயிரினங்களை சேதப்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் செய்கைபண்ணப்பட்டுள்ள கத்தரி, வெண்டி, புடோல், மிளகாய், உள்ளிட்ட பல மேட்டுநிலப் பயிரினங்களையும், இவ்வாறு குரங்குகள் அழித்து வருவதாக அப்பகுதி விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே குரங்குகளை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி, தாம் சுயமாக பயிர்செய்து வாழ்வதற்குத் தடையாகவுள்ள குரங்குத் தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்