இன்று (07) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததையடுத்து யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சபையில் உரையாற்றியபோது, நான் பாராளுமன்ற சிறப்புரிமைகள் பற்றி டிசம்பர் 18 ஆம் திகதி ஒரு கடிதத்தை கொண்டுவந்தேன். எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. நான் கொடுத்த கடிதத்திற்கு இன்றுவரை எனக்கு எந்தப்பதிலும் கிடைக்கவில்லை.
எதிர் கட்சித் தலைவருக்கு நீங்கள் கடிதம் அனுப்பியதாக அறிந்திருக்கிறேன். ஆனால் இன்றும் கூட எனக்கு பாராளுமன்றத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
பாராளுமன்றத்திற்கு நான் யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்றேன். எனக்கு பதிலைத்தாருங்கள் என சபாநாயகரை நோக்கி கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்குப்பதிலளித்த சபாநாயகர், நாங்கள் எதிர்கட்சித்தலைவருக்கு இந்தவிடயத்தை கொண்டுசென்றிருக்கின்றோம். இதுதொடர்பாக பதிலை பெற்றுக்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனத்தெரிவித்தார்.