நாடாளுமன்ற நிதிக்குழுவில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஆர்கம் இல்யாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (07) ஆரம்பமான புதிய வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவால் இந்த நியமனங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிதிக்குழுவின் தலைவராக முன்னர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.