கருத்தடை மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது பெண்களுக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளை சுகாதார வழங்குநர்கள் தெரிவிப்பதில்லை என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சில சுகாதார வல்லுநர்கள் மாத்திரைகளின் (பிறப்பு கட்டுப்பாடு) சில பாதகமான விளைவுகளைப் பற்றி பெண்களுக்கு கூறுவதில்லை மற்றும் அது தொடர்பான கேள்விகளைத் தவிர்ப்பதை நாங்கள் அவதானித்துள்ளோம் என்று நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தின் நவீன தெற்காசிய ஆய்வுகள் பேராசிரியர் நீரா விக்கிரமசிங்க நேற்று (7) இடம்பெற்ற நிகழ்வில் குற்றம் சாட்டினார்.
மேலும், திருமணமாகாத தாய்மார்கள் போன்ற அனைத்து சமூக கலாச்சார பின்னணியில் உள்ள தாய்மார்களையும் ஏற்றுக்கொள்வதற்காக அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவச்சிகள் பயிற்சி பெற வேண்டும் என்று கல்வியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவச்சிகள் திருமணமாகாத தாய்மார்கள் போன்ற சில பெண்களை ஏற்றுக்கொள்ளாததால் அவர்களுக்கு பயிற்சி தேவை என்பதை நாங்கள் கண்டோம் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த ஆலோசகர் வைத்தியர் சுசி பெரேரா கூறினார்.
குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமண அந்தஸ்தின் தேவையை இலங்கை அரசாங்கம் இப்போது இரத்து செய்துள்ளது.
எவ்வாறாயினும், ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.