காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கடற்கரை வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருக்கும் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீமெந்து மூட்டைகளை சந்தேக நபர்கள் திருடி தப்பிசென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மேலும் தெரவித்துள்ளது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
குறித்த வீட்டின் கட்டடப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் சென்றுள்ளனர்.
அடுத்த நாள் பணிகளுக்காக வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே இருந்த 13 சீமெந்து மூட்டைகள் திருடப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது சீமெந்து மூட்டைகளை திருடிய நபர் தனது வீட்டின் ஒரு பகுதி சீமெந்து மூட்டைகளை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் 13 சீமெந்து மூட்டைகளையும் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவதில் தொடர்புபட்ட சந்தேக நபர்களை காத்தான்குடி பொலிஸார் தேடி வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.