சிங்கள இனவாதிகள் வடக்கு கிழக்கில் ஆளுமை செலுத்தக் கூடியன நிலைமை மற்றும் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசியத்தை பலப்படுத்த தமிழ் தேசியத்தின் பால் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் சேர்வதற்கான செயல்வடிவங்களை தமிழ் தலைமைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் கட்சிகளை கலைத்துவிட்டு வெளியேறி போகலாம் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈ.பி,ஆர். எல். எப் கட்சியின் சிரேஸ் உறுப்பினருமாக இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள கட்சி காரியாலயத்தில் நேற்று (9) இடம்பெற்று ஊடகமாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் உருவாகி மூன்று மாதம் ஆகிய நிலையில் 2025 ஒரு தேர்தல் ஆண்டாக பார்க்க கூடியதாக இருக்கின்றது. இது கடந்த காலத்தில் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்கள் செய்த தவறாகும். ஜனாதிபதி தேர்தலாகட்டும் உள்ளுராட்சி தேர்தலாகட்டும், மாகாணசபை தேர்தலாக இருக்கலாம். இருந்தபோதும் நீதிமன்றம் ஊடாக உள்ளுராட்சி தேர்தல் விரைவாக நடாத்தப்பட வேண்டும் என செல்லப்பட்டுள்ளதுடன் புதிய தேர்தல் ஆணைக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கை பொறுத்தமட்டில் சிறுபான்மையாகிய நாங்கள் பல சதாப்தங்களாக பலவற்றை இழந்து, எந்த அதிகாரமும் இல்லாமல் நடுத் தெருவில் நிற்கின்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது
42 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் உரிமை தொடர்பான இந்த போராட்டத்தில் வடக்கு கிழக்கிலுள்ள ஒவ்வொரு தமிழ் குடும்பங்களும் அர்பணிக்கப்பட்டு பல வடுக்களை தாங்கி விலைமதிக்க முடியாத இழப்புக்களை சந்தித்தவர்கள்.
இந்த வகையில் தேசிய இனவாதிகள் வடக்கு கிழக்கை ஆளுமை செலுத்தக் கூடியதாக மாற்றக் கூடிய நிலை நிறுத்தப்பட வேண்டுமாயின், சிங்கள இனவாதிகளின் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழர்களுக்கு இனப்பிரச்சனை தொடர்பான சம்மந்தப்பட்ட விடையத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதை நாங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டுமாயின் எதிர் காலத்தில் நாங்கள் இந்த உள்ளூராட்சி என்றாலும் சரி மாகாண சபை தேர்தலாக இருந்தாலும் சரி ஓரணியில் திரண்டால் மட்டுமே எதிர்காலத்தில் தமிழர்களின் தேசியத்தை பாதுகாக்க முடியும்-என்றார்.