19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியினரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் காலி- ரத்கமவில் உள்ள தேவபதிராஜா கல்லூரியைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
ஜனவரி 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 2ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கு 15 பேர் கொண்ட அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
எனினும், இந்த அணியில் தமிழ் வீராங்கனைகள் எவரும் இடம்பெறவில்லை.
இந்தநிலையில், இலங்கை அணி நாளை ஜனவரி 11ஆம் திகதி மலேசியாவுக்கு புறப்படவுள்ளது.
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி மலேசியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியாவுடனான குழுவில் இடம்பெற்றுள்ளது.