உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் மக்கள் கூட்டம் பொருட்களை கொள்வனவு செய்வதை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ( 12 ) அவதானிக்க முடிந்தது.
வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார கடைகளிலும் வியாபாரம் களை கட்டிய நிலையில் மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும், மண்பானை ,மண்சட்டி போன்ற பொங்கலுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதையும் காண முடிந்தது.
படுவான் கரையையும் எழுவான் கரையையும் இணைக்கும் பிரதான நகரமாக பட்டிருப்பு தொகுதியில் களுவாஞ்சிக்குடி நகர் பிரதான வர்த்தக நிலையமாக விளங்குகிறது.