கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றைய தினம் (11) முற்பகல் 10:30 மணிக்கு மிகவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஒரு பசு வழங்கும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட நிகழ்வு இடப்பெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தலா இரண்டு பேர் வீதம் பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட ஆறு (06) பயனாளிகளுக்கு இந்த பசு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் இடம் பெற்றதுடன், இந் நிகழ்வில் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தலைவர் (வண்ணக்கர்) , செயலாளர் (வண்ணக்கர்) , பொருளாளர் (வண்ணக்கர்),தேச மகாசபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.