விஜயகாந்தை போல் அரசியலுக்கு வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று தே. மு. தி. க. பொருளாளரும் மற்றும் நடிகர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது அவருக்கு விடுக்கப்பட்ட சூசகமான எச்சரிக்கையா என்று கேள்வி எழுந்துள்ளது.
சென்னை அந்தக் கட்சியின் பணிமனையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இதன் போது, விஜயின் அரசியல்வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த அவர்,யார் நினைத்தாலும் விஜயகாந்தைப் போல் வர முடியாது.
அறிவுரை வழங்குவதற்கு எல்லாம் இங்கு ஒன்றுமில்லை. அரசியல் என்பது வேறு, சினிமா
என்பது வேறு. விஜய் மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார். பாராட்டுக்குரிய விசயம். விஜய் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பது பற்றி அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும். அவர் சொல் தற்கு முன் அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது.
விஜயகாந்த் எப்படி தொடக்ககாலத்தில் மாணவர்களுக்கு இலவச கணினி பயற்சி உள்ளிட் டஉதவிகளை செய்தது போலவே, தற்போது விஜயும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை
செய்து வருகிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.அனைத்து நற்செயல்களுக்கும் முன்னுதாரணம் விஜயகாந்த். தன்னால் முடிந்ததை மக்களுக்கு செய்த ஒரே தலைவர் கப்டன் தான். 40 ஆண்டுகாலம் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்.
கப்டனைப் போல் ஒருவர் பிறந்து வந்தால்தான் உண்டு. விஜயகாந்த் வாழ்க்கை ஒரு வரலாறு. அவர்
ஒரு சரித்திரம். அப்படிப்பட்ட அவரைப்போல் அரசியலுக்குவர நினைத்தால், அதனுடைய விளைவு மோசமாகத்தான் இருக்கும். எனென்றால் இன்று எல்லா விசயங்களுக்கும் கப்டன் ஒரு முன்னுதாரணம் – என்றார்.