இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு கிளிநொச்சி அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்றது.
இதன்போது, சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வெகு விரைவில் இந்திய – இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நடைபெறும்.
தமிழக அரசின் அழைப்பின் அயலகத்தமிழர் தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கான பேச்சு வார்த்தைகள் விரைவில் நாடாத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.