Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடந்த ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 304 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்; தடுக்க ‘சரோஜா’ திட்டம் ஆரம்பம்

கடந்த ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 304 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்; தடுக்க ‘சரோஜா’ திட்டம் ஆரம்பம்

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் உட்பட கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ம் ஆண்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது.

எனவே பாதுகாப்பற்ற சிறுமிகள் எத்தனைபேர் உள்ளனர். எனவே இவர்களை பாதுகாப்பதுடன் தடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஸ்பிரயோகத்தை தடுக்கும் ‘சறோஜா’ திட்டம் ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்படபத்தில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற போது இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்கள் அதனால் இவ்வாறான குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய் தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில் வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைப்பதில்லை.

ஒரு பெண் குழந்தைக்கு பாலியல் துஸ்பிரயோகம் நடந்த பின்னர் அதனை முறைப்பாடு செய்வதால் பிரயோசனமில்லை.

எனவே துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக முதல் பாதுகாப்பது தான் சிறந்தது. அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும்.

சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது தந்தையார் வெளிநாடு சென்றிருப்பார். அல்லது தாய் தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பார்கள்.

இவ்வாறு ஏற்படும் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

எனவே ‘சரோஜா’ திட்டமானது பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் பாதுகாப்பதே இந்த திட்டம். எனவே மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு, அவர்களைத் தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு இந்த பாலியல் துஸ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படவேண்டும்.

ஏன் என்றால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இதற்கு சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் வனிதா சேவா, சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தரவின் தயாரிக்கப்பட்ட இந்த திட்ட நிகழ்வில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் மென்டிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பெண்கள் சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் வனிதா சேவா, சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள், பிரதேச செயலக சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் வீடியோ மூலமாக இந்த சரோஜா திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

July 24, 2026
பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

July 24, 2026
பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
Next Post
சிவப்புக் கோட்டை தாண்டிய ஈரான்; மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை

சிவப்புக் கோட்டை தாண்டிய ஈரான்; மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.