யாழ்பாணத்தில் இருந்து கல்முனைக்கும் மற்றும் வாழைச்சேனையிலிருந்து பொத்துவில் நோக்கி பிரயாணித்த இரு இலங்கை போக்குவரத்து பஸ்வண்டிகள் மீது, வாழைச்சேனை சுங்கான்கேணி 18வது மையில் பிரதேசத்தில் இனம் தெரியாதேரினால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலினால் இரு பஸ்வண்டிகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்த சம்பவம் நேற்று (15) இரவு 07.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பஸ் வண்டிகள் வழமைபோல போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்கான்கேணி பிரதேசத்தில் சம்பவதினமான இரவு 07.30 மணியளவில் இனம் தெரியாதோரினால் பஸ் வண்கள் மீது தீடிரென கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதனையடுத்து, பஸ் வண்டிகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்ததுடன், பிரயாணிகள் தெய்வாதீனமாக உயர் தப்பியதுடன் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதனையடுத்து பஸ்வண்டிகள் அங்கு நிறுத்தப்பட்டு அதில் இருந்த பிரயாணிகளை வேறு பஸ்வண்டிகளில் மாற்றி ஏற்றி அனுப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.