எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு, சில்லறை விலையில் மூலப்பொருளை கொள்வனவு செய்வதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு 56 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக பொது பயன்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அனல் மின் உற்பத்திக்கு மானிய விலையில் எரிபொருள் கிடைத்தால் நாட்டில் மின்சார கட்டணத்தை 11 சதவீதம் குறைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
பொது பயன்பாட்டு ஆணையம் ஒரு ஆலோசனை அறிக்கை மூலம் மின்சார சபைக்கு ஆறு மாதங்களுக்கு 56 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் அனல் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
எரிபொருள் நிலையங்களில் இருந்து மக்கள் வாங்கும் அதே விலையில் தான் மின்சார சபையும், டீசலை மின் உற்பத்திக்கு பெற்று கொள்கிறது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், மின்சார உற்பத்திக்கான எரிபொருள் செலவை ஈடுசெய்யும் விலையில் வழங்கினால்,நாட்டில் உள்ள மின்சார நுகர்வோருக்கு ஆண்டுதோறும் 56 பில்லியன் ரூபாயை சேமிக்க மின்சார சபைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.