தெஹிவளை – கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் கல்கிஸை – படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சவிந்து தரிந்து என்பவர் என தெரியவந்துள்ளது.
தெஹிவளை – கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
இதேவேளை, துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைத்துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.