கடுமையான மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து, மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியான கல்லெல தொடக்கம் மன்னம்பிட்டி வரையிலான வீதியில் நீர் நிரம்பி காணப்படுவதனால் அதனுடாக போக்குவரத்து செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடையானது இன்று(19) மாலை ஐந்து மணிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே வெலிகந்த, திம்புலாகல, மட்டக்களப்பு வரை பயணம் செய்யவுள்ள பயனிகளின் நலன் கருதி புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளைய (20) திகதி குறிப்பிட்ட பாதையின் நிலைமை பரிசீலனை செய்யப்பட்ட பின் போக்குவரத்து தொடர்பான தகவல் வெளியிடப்படும் என பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்