இலங்கை இராணுவ முகாமில் இருந்து காணாமல் போயிருந்த 73 T56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களிடம் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இச்செய்தி தேசிய பாதுகாப்புக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காணாமல் போன ஆயுதங்களில் 38 ஆயுதங்களை அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டுள்ளதுடன் மீதமுள்ளவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி, இச்சம்பவம் தொடர்புடையவர்கள் என 13 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்பு கருதி மீதமுள்ள ஆயுதங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.