இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன.
அற்தவகையில் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இயங்கி வருகின்ற அமேசோன் நிறுவனத்தின் பல கிளைகள் நட்டத்தில் இயங்கி வருகின்றன. எனவே அங்குள்ள 7 அலுவலங்களை மூடுவதாக அமேசோன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் அங்குபணிபுரிந்து வரும் 1,700 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இந்த அறிவிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.