நேற்று சனிக்கிழமையன்று மாலை (25) இவர்கள் கோராவெளியில் உள்ள தங்களது சேனைக்கு சென்றவேளை கோராவெளி புலிபாய்ந்த கல் வீதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கண்ணகி அம்மன் கோயில் வீதி கிரானைச் சேர்ந்த கா.குருபரன் (53-வயது), திகிலிவெட்டை சந்திவெளியைச் சேர்ந்த மா.விநாயகமூர்த்தி (71-வயது) என்ற முதியவருமே இவ்வாறு வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணியில் பொதுமக்கள் பொலிசார் மற்றும் பிரதேச இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது குறித்த இரு சடலங்களும் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை காலை கண்டு பிடிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மரண விசாரணைகளின பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோறளைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வ. இரமேஷ் ஆனந்தன் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் வெள்ள நீரானது இதுவரை வழிந்தோடவில்லை. இதனால் குறித்த பிரதேசத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு காணப்படுவதனால், பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நன்மை கருதி படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் வெள்ள அபாயம் தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற அறிவித்தல்களும் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் இவ் உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளது.