Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மாணவர்களுக்கு 200 புலமைப்பரிசில்களை அறிவித்த இந்தியா

இலங்கை மாணவர்களுக்கு 200 புலமைப்பரிசில்களை அறிவித்த இந்தியா

2 years ago
in செய்திகள்

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், இலங்கையர்களுக்கான பல்வேறு நிலைகளில், முழுமையாக நிதியளிக்கப்பட்ட 200 புலமைப்பரிசில் உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இந்த உதவித்தொகைகள் மருத்துவம், பராமெடிக்கல், ஃபேசன் டிசைன் மற்றும் சட்டப் படிப்புகள் தவிர்ந்த பட்டப்படிப்புக்களுக்காக இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படுகின்றன.

இலங்கையர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் உதவித்தொகைகள் 2025 – 2026 கல்வி அமர்வுக்கானவை என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்த உதவித்தொகைகள் வழங்கப்படும் திட்டங்களையும் இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

இதன்படி, நேரு நினைவு உதவித்தொகை திட்டம், மௌலானா ஆசாத் உதவித்தொகை திட்டம் , ராஜீவ் காந்தி உதவித்தொகை திட்டம் மற்றும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பொதுநலவாய உதவித்தொகை திட்டம் ஆகியவை உள்ளடங்கும்.

குறித்த திட்டங்கள் ஒவ்வொன்றும் பாடநெறியின் முழு காலத்திற்கும் முழு கல்விக் கட்டணம், மாதாந்த உணவுப் படி மற்றும் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களுக்கான வருடாந்த மானியம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

அத்துடன் இந்தியாவின் அருகில் உள்ள இடங்களுக்கான விமானக் கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கல்விச் சுற்றுலாக்களுக்கான வருடாந்த மானியம் என்பனவும் வழங்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அந்தந்த வளாகத்திற்குள் விடுதி வசதியும் வழங்கப்படும்.

இந்தநிலையில், இந்திய அரசாங்கம், இந்த உதவித்தொகைகளை வழங்குவதற்காக தகுதியான இலங்கையர்களைத் தேர்ந்தெடுப்பதாக குறிப்பிட்டுள்ள உயர்ஸ்தானிகரகம், வேட்பாளர்களின் தேர்வு இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

தேவையான விபரங்கள் கல்வி அமைச்சின் வலைத்தளமான www.mohe.gov.lk இல் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தகுதி அளவுகோல்கள் மற்றும் தேர்வு நடைமுறை பற்றி மேலும் அறிய கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் (eduwing.colombo@mea.gov.in) அல்லது இலங்கை அரசின் கல்வி அமைச்சகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
Next Post
பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்; மட்டு போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனர் இயந்திரங்களை வழங்க உறுதி

பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்; மட்டு போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனர் இயந்திரங்களை வழங்க உறுதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு