Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்; மட்டு போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனர் இயந்திரங்களை வழங்க உறுதி

பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்; மட்டு போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனர் இயந்திரங்களை வழங்க உறுதி

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ள 14 பிரதேச செயலகப்பிரிவுக்குமான பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (27) மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டமாக இந்த கூட்டம் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.வாசுதேவனின் ஒழுங்கமைப்பில், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி டாக்டர் க.கலாரஞ்சினி உட்பட திணைக்கள தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சுமுகமான முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

குறிப்பாக தற்போதைய அரசாங்கதால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மக்களின் தேவையினை முழுமையாக நிறைவேற்றுவதாக இருப்பதுடன், மக்களின் பணம் வீண்விரயமாக்கப்படாமல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் இங்கு வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், வைத்தியசாலையின் குறைபாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள், வைத்தியசாலையின் பரப்பளவினை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்தல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் எம்ஆர்ஐ ஸ்கேனர் உட்பட அவசியமான இயந்திரங்களை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ள நிலையில், அவசர தேவை கருதி அவற்றினை முன்னிலை அடிப்படையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் உட்பட அதன் செயற்பாடுகள் ஆராயப்பட்டதுடன் மேலும் வினைத்திறனாக கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இதன்போது மாநகரசபையின் ஆணையாளரினால் உறுதியளிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் மற்றும் அரச திணைக்களங்களின் ஒத்துழைப்பினையும் இதன்போது கோரியிருந்தார்.

மழை காலங்களில் மட்டக்களப்பின் பல பகுதிகளில் ஏற்படும் வெள்ள நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், அதற்கு முன்பாக வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வடிகான்களை சீரமைத்தல் தொடர்பாகவும், எதிர்காலத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

அத்துடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதுடன் தொடர்ந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பொது அமைப்புகளும் இணைந்து செயற்பட்டு, மக்களுக்கான பணியை முன்னெடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கட்டடத் தொகுதியில் இருந்து அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு

மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கட்டடத் தொகுதியில் இருந்து அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.