மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வ.வாசுதேவன் அவர்கள் பதவி உயர்வு பெற்று, கொழும்பு கமத் தொழில் திணைக்களத்திற்கு செல்லும் பிரியாவிடை நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நேற்று முன்தினம் (31) நடைபெற்றது.
செயலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்களினால் இந்த பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பொன்னாடை, மாலைகள் அணிவித்து மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி முன்னாள் பிரதேசசெயலாளர் கௌரவிக்கப்பட்டார்.
அதேசமயம் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் தற்போதைய பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் அவர்கள் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளராக கடமை புரியும் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் அவர்கள் மண்முனை வடக்கின் புதிய பிரதேச செயலராகவும், காத்தான்குடியின் புதிய பிரதேச செயலாளராக திருமதி நிஹாறா மஹ்ஜூத் அவர்களும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் இடமாற்றம் பெற்று ஏறாவூர் நகர பிரதேச செயலகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் கோறளைப்பற்று மத்தியின் உதவி பிரதேச செயலாளர் மொஹமட் அப்துல் காதர் ரனுசா அவர்கள் தற்காலிக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.