அனுராதபுரம் – பாதெனிய வீதியில், மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் வெலிவேரிய, கொச்சிவத்தை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய கணவனும் 53 வயதுடைய அவரது மனைவியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மஹவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.