Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி கைத்தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

காத்தான்குடி கைத்தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்வகேட் அப்துல் காதர் பகுதியில் அமைந்திருந்த கைத்தொலைபேசி விற்பனை வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.

நவீன ரக கைத்தொலைபேசி விற்பனை நிலையங்களான குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால், பல கோடி ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசிகள் எரிந்து நாசமாகி உள்ளன.

நேற்று முன்தினம் (31) இரவு சுமார் பத்து மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை தீயணைப்பு படையினர் இரு மணித்தியாலங்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் அனைத்து தொலைபேசிகளும், பேட்டரிகள் மற்றும் வர்த்தக நிலையத்தில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

காத்தான்குடி பொலிஸார், இராணுவத்தினர் ஸ்தலத்துக்கு விரைந்து, தீயணைப்பு படை வீரர்களுக்கு உதவி புரிந்தனர். பொதுமக்களும், இளைஞர்களும் பெருமளவிலாக வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

ஸ்தலத்துக்கு விரைந்த நகர சபை செயலாளர் மற்றும் மின்சார சபை மின் பொறியியலாளர், மின்சார சபை ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

சம்பவத்தின் காரணமாக மேற்படி வர்த்தக நிலையத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் காத்தான்குடி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaatham.net #srilanka #Batticaloa #battinaatham #ACCIDENT #KATTANKUDI

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
செய்திகள்

முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

September 8, 2026
விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு
செய்திகள்

விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு

September 8, 2026
மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்
அரசியல்

மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்

September 8, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

September 8, 2026
Next Post
வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தில் 26 விவசாய அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா

வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தில் 26 விவசாய அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு