குறிப்பிட்ட சில அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு கனடா பதிலடி கொடுக்கும் வகையில் 155 பில்லியன் கனேடிய டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த புதிய வரி விதிப்பை அறிவித்தார்.
அதேசமயம் ஜஸ்டின் ட்ரூடோ இதற்கு முன் தன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருந்தாலும், இன்னொருவர் கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் இருந்து நீக்கப்படமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.