காசு கொடுத்து பொருட்கள் வாங்கிய நாட்கள் மலையேறி கேஷ்லெஸ் பேமெண்ட் என்ற டிஜிட்டல் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கேஷ்லெஸ் பேமெண்ட் முறையை அமேசான் நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று விட்டது. இதன் மூலமாக மளிகை பொருட்களை வாங்கும் தனது வாடிக்கையாளர்கள் உள்ளங்கையை பயன்படுத்தி பேமெண்ட் செலுத்தும் புதிய நடைமுறையை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
வியாழக்கிழமை அன்று அமேசான் ஒன் (Amazon One) எனும் பாம் ரெகக்னிஷன் சர்வீஸ் என்ற புதிய பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்திய அமேசான் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவர் பேமெண்ட், ஐடென்டிஃபிகேஷன், லாயல்டி மெம்பர்ஷிப் மற்றும் நாடு முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஹோல் ஃபுட்ஸ் அண்ட் அமேசான் ஃப்ரெஷ் தளங்களில் நுழையலாம் என்று கூறியுள்ளது.
அமேசான் ஒன் சப்ஸ்கிரிப்ஷன் பெற்ற வாடிக்கையாளர்கள் அமேசான் ஒன் சாதனத்தின் முன்பு தங்கள் உள்ளங்கையை அசைப்பதன் மூலமாக பேமெண்ட்களை செலுத்தலாம். இனியும் பேமெண்ட்களை செலுத்த கிரெடிட் கார்டு அல்லது மொபைல் போன் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அதோடு நீங்கள் ஒரு அமேசான் பிரைம் மெம்பராக இருந்தால், உங்களது மெம்பர்ஷிப்பை அமேசான் ஒன்னுடன் இணைப்பதன் மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு சேமிப்புகள் அல்லது பலன்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் தற்போது அரிசோனா, கலிஃபோர்னியா, இடாகோ, ஓரிகான் மற்றும் மிசிசிபி உட்பட 20 அமெரிக்க மாநிலங்களில் உள்ள 200 இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் அமேசானின் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த நீங்கள் ஹோல் புட்ஸ் இல் மட்டுமே ஷாப்பிங் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்னும் ஏராளமான பிசினஸ்களில் பேமென்ட் ஐடென்டிஃபிகேஷன் மற்றும் பாதுகாப்பான உள்நுழைவு சாதனமாக அமேசான் ஒன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பக் கட்டத்தில், பனீரா பிரட் நிறுவனமே இந்த தொழில்நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியது. பனீரா ஃபுட்ஸ் வாடிக்கையாளர்கள் தாங்கள் சாப்பிட்ட உணவுகளுக்கு பேமெண்ட் செலுத்த தங்களது கைகளை சாதனத்தின் மீது அசைத்தால் மட்டும் போதும். அதுமட்டுமல்லாமல் கொலராடோவில் இருக்கக்கூடிய குவர்ஸ் பீல் ஸ்டேடியத்தில் மதுபானங்கள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அமேசான் ஒன் நிறுவனம் சாதனத்தின் மீது தங்கள் கைகளை அசைக்க வேண்டும். அவ்வாறு அசைத்து தாங்கள் 21 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இந்த பேமெண்ட் முறை பாதுகாப்பானதா? உள்ளங்கையை பயன்படுத்தி செயல்படும் இந்த கேஷ்லெஸ் பேமெண்ட் முறை மிகவும் பாதுகாப்பானது. இதில் எந்தவிதமான ஏமாற்று வேலையையும் செய்ய முடியாது. ஏனெனில் இந்த தொழில்நுட்பமானது ஒருவரின் உள்ளங்கை மற்றும் அதில் உள்ள தனித்துவமான நரம்பு அமைப்பை ஸ்கேன் செய்கிறது. ஒவ்வொரு நரம்பு அமைப்புக்கும் ஒரு குறிப்பிட்ட எண் பிரதிநிதித்துவம் சாதனத்தில் சேமிக்கப்படும். கிரெடிட் கார்டு அல்லது பாஸ்வேர்டு போல அல்லாமல் அமேசான் ஒன் வழங்கும் இந்த பேமெண்ட் செலுத்தும் முறையை பயன்படுத்தி எந்த ஒரு வாடிக்கையாளரும் ஏமாற்ற முடியாது.
மேலும் வாடிக்கையாளர்களின் தகவல் 300 கிளவுட் செக்யூரிட்டி டூல்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சம் செக்யூரிட்டி பார்ட்னர்கள் மூலமாக AWS கிளவுடில் பாதுகாக்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல், இந்த உள்ளங்கை சார்ந்த தகவல்களை எந்த ஒரு காரணத்திற்காகவும் அமேசான் வேறு எந்த மூன்றாம் தரப்பு நபரிடமும் பகிர்ந்து கொள்ளாது என்பதை உறுதி அளித்துள்ளது.