நாட்டில் கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சில புதிய திருத்தங்களை கொண்டு வர தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள முறை சட்டத்தக்கு முரணானது என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 04 அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்த அறிப்பை விடுத்துள்ளாா்.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.