சுமார் 56 வருங்களுக்கு பின்னர், 2025 மே 10 முதல் 24ஆம் திகதி வரை இலங்கையின் ஆசிய இளைஞர் குத்துச்சண்டை செம்பியன்சிப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இறுதியாக இலங்கையில் 1969ஆம் ஆண்டு சுகததாச உட்புற மைதானத்தில் ஆசிய குத்துச்சண்டை செம்பியன்சிப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில், இலங்கையில் மே மாதம் நடைபெறவுள்ள போட்டிகளில் 2003, 2004, 2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள், U-22 பிரிவில் போட்டியிடுவார்கள்.
அதேநேரத்தில், 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களும் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். முன்னதாக, 2024 ஏப்ரல் 27 முதல் மே 7 வரை கசகஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் இலங்கை பங்கேற்றது.
அதில், 25 நாடுகளைச் சேர்ந்த 397 குத்துச்சண்டை வீரர்கள் பல்வேறு எடைப் பிரிவுகளில் 50 பதக்கங்களுக்காகப் போட்டியிட்டனர்.