இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க சகல கிரிக்கெட் இரசிகர்களிடமும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்வையிடுவதற்கு சகல கிரிக்கெட் இரசிகர்களும் செல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் திமுத் கருணாரத்ன தீர்மானித்துள்ள நிலையில், மேற்படி கோரிக்கையை முன்னாள் வீரர் லசித் மாலிங்க விடுத்துள்ளார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் நாளை(06) காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டி திமுத் கருணாரத்னவின் 100ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும்.
இந்தநிலையில், நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் திமுத் கருணாரத்ன சதத்தைப் பெறுவார் என தாம் எதிர்பார்ப்பதாக லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.